அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியரான திரைப்பட இயக்குநர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிக்க இத்தாலியைச் சேர்ந்த மிக அழகிய நடிகையான மோனிகா பெலுசி ஒப்புக் கொண்டதாகவும், பிறகு பல்வேறு காரணங்களால் படம் கைவிடப்பட்டதாகவும் அறிவித்திருந்தது தற்போது வைரலாகியிருக்கிறது.சோனியா என்ற பெயரில், சோனியா காந்தியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க 20 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க இயக்குநர் திட்டமிட்டதாகவும், அப்போது சோனியா பாத்திரத்தில் இத்தாலி நடிகை மோனிகா பெல்லூசி நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சோனியாவின் சுய சரிதை புத்தகம் வெளியாகி பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகள் பேசப்படும் நிலையில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இதுபற்றிய செய்தியும் வைரலாகியிருக்கிறது.காங்கிரஸ் தரப்பிலிருந்து இயக்குநருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் கைவிடப்பட்டிருக்கிறது.லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த இந்திய இயக்குநர் ஜக்மோகன் முந்த்ரா திரைப்படம் எடுக்க திட்டமிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நவம்பர் 10ஆம் தேதி சோனியாவின் சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 2 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.