அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!

Wait 5 sec.

ஹோர்முஸ் நீரிணையின் அருகிலுள்ள தீவுப்பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ட்ரோன் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானிய ராணுவம் அறிவித்துள்ளது.ஹோர்முஸ் நீரிணையில் அருகிலுள்ள ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் அமைந்துள்ள கேஷ்ம் தீவைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், கேஷ்ம் தீவில் அமெரிக்க ராணுவம் ஏவிய அதிநவீன யுஎஸ் எம்.கியூ.1 பிரடேட்டர் ரக ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை இன்று (நவ. 21) அறிவித்துள்ளது. ஈரானின் அரசுத் தொலைக்காட்சியில் வெளியான இந்தச் செய்தி குறித்து அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.ஈரான் மீதான அமெரிக்காவின் போரில், எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்க படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.முன்னதாக, அமெரிக்கா முன்மொழியும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் வரையில், ஈரான் மீதான பொருளாதார அழுத்தம் தொடரும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.ஒப்பந்தம் ஏற்கப்படும் வரை ஈரான் மீது பொருளாதார அழுத்தம் தொடரும்! அமெரிக்கா அறிவிப்பு!The Iranian military has announced that it shot down a sophisticated U.S. military drone in the island region near the Strait of Hormuz.