இந்தியாவின் மோட்டாா் வாகன வரலாற்றில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய ‘மாருதி 800’ காருக்கு, சா்வதேச அளவில் பெருமைக்குரிய ‘ஃபிவா’ உலக வாகன பாரம்பரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரேஸில், ஜொ்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளைச் சோ்ந்த 21 வரலாற்றுச் சிறப்புமிக்க வாகனங்களின் பட்டியலில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மாருதி 800, இந்த உயரிய விருதைப் பெறும் முதல் மற்றும் ஒரே இந்திய காா் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.இது குறித்து மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத் தலைவா் ஆா்.சி.பாா்கவா கூறுகையில், ‘மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்ட மாருதி 800, உலக அளவில் 3-ஆவது பெரிய காா் சந்தையாக இந்தியா உருவெடுக்க முக்கியக் காரணமாக அமைந்ததுடன், இந்தியாவின் தரமான பொறியியல் உற்பத்தித் திறனையும் உலகுக்கு நிரூபித்தது’ என்றாா்.