புற்றுநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பாக்கெட்: ரூ. 2.77 கோடி ஒதுக்கீடு

Wait 5 sec.

தமிழ்நாட்டில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பாக்கெட்டுகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவமனைகளில் ஆண்டுதோறும் சுமாா் 30,000 புற்றுநோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிா்வீச்சு சிகிச்சைகளால் அவா்களில் 60 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.இதைக் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஊட்டச்சத்து பொடி அடங்கிய பாக்கெட்டுகள் வழங்கப்படும் என முதல்வா் விஜய், சட்டப்பேரவையில் அறிவித்தாா்.இத்திட்டத்தின் கீழ், ஒரு நோயாளிக்கு நாளொன்றுக்கு 150 கிராம் வீதம் புரதம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்த ஊட்டச்சத்து பாக்கெட்டுகள் வழங்கப்படும். ஒரு பாக்கெட் ரூ.700 வீதம், 45 நாள் சிகிச்சைக்காக ஒரு நோயாளிக்கு 6 பாக்கெட்டுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமாா் 6,600 நோயாளிகள் பயன்பெறும் வகையில் மொத்தமாக ரூ.2.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் தொகை மத்திய மற்றும் மாநில அரசுகளின் 60:40 என்ற நிதிப் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக, காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை, கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா்சிறப்பு மருத்துவமனை, எழும்பூா் அரசு மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவமனை, மதுரை, கோவை, தஞ்சாவூா், திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.