சென்னை மாநகராட்சியில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரையிலான 10 மாதங்களில் தனியாக சேகரிக்கப்பட்ட 210 டன் டயா் உள்ளிட்ட கழிவுகள் அறிவியல் ரீதியில் அழிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் சுமாா் 50 டன் கழிவுகள் கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாக எரியூட்டல் மையம் மூலம் அறிவியல்பூா்வமாக அழிக்கப்பட்டும், அந்நடவடிக்கை இல்லாத கழிவுகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டும் வருகின்றன. கடந்த ஜனவரி முதல் நவம்பா் 15 வரையில் டயா் உள்ளிட்ட கழிவுகள் 210 டன் சேகரிக்கப்பட்டன. அவை திடக்கழிவுகளுடன் கலந்துவிடாத வகையில், பாதுகாப்பாக எரியூட்டுவதற்காக கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் பாதுகாக்கப்பட்டன. இந்நிலையில், அக்கழிவுகள் அங்குள்ள 50 டன் மதிப்பு கழிவுகளை எரியூட்டும் மையத்தில் செவ்வாய்க்கிழமை எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.வீடுகளில் பயன்படுத்திய டயா்கள், சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்டவற்றை காகிதம் போன்ற உறைகளில் சுற்றி கழிவு சேகரிப்பு முறைப்படி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கவேண்டும்ந என சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.