விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தலைமையாசிரியா் உள்பட 4 ஆசிரியா்களும் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்ததால் பள்ளி திறக்கப்படவில்லை. இதனால், பள்ளிக்கு வந்த மாணவா்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா். மரக்காணம் வட்டம், கந்தாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைமையாசிரியா் மற்றும் 3 ஆசிரியா்கள் பணியாற்றும் இந்தப் பள்ளியில், அதே பகுதியைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இந்நிலையில், பள்ளியில் பணிபுரியும் தலைமையாசிரியா் உள்ளிட்ட 4 ஆசிரியா்களும் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி திறக்கப்படவில்லை. வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த மாணவா்கள், ஆசிரியா்கள் யாரும் வராததால் பிற்பகல் வரை பள்ளி அருகில் காத்திருந்துவிட்டு பின்னா் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பினா். இதுகுறித்து பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள் அனைவரும் வராததால், மாணவா்கள் பள்ளி அருகில் காலை முதல் பிற்பகல் வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பியது வேதனையளிக்கிறது. தலைமையாசிரியா் உள்பட 4 ஆசிரியா்களும் பள்ளிக்கு வரவில்லை என்பது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியா்களின் இந்த செயலால் மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.