வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்

Wait 5 sec.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள மாநிலம் முழுவதும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோருக்கு இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்துள்ளது. இதன்படி தகுதியுள்ள இளம் வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.18 வயது பூர்த்தியடைந்த மற்றும் தகுதியான வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 மற்றும் அதனுடன் கூடிய உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.இதேபோல், பெயர் நீக்குவதற்கு படிவம் 7, வாக்காளர் விவரத் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மாற்றுப் பிரதி பெறுவதற்கு படிவம் 8-ஐயும் பூர்த்தி சமர்ப்பிக்க வேண்டும்.2027 ஜனவரி 1-ல் 18 வயது பூர்த்தியடைவோர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதோர் இந்த சிறப்பு முகாம்களில் பயன் பெறலாம்.மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்றும் நாளையும் (நவ. 21, 22) இரு நாள்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாகவும் (https://voters.eci.gov.in/) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்?Two-day special camp for revisions to the electoral roll in Tamil Nadu