சத்தியமங்கலம் அன்பிற்பிரியாள் அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் பிரசித்தி பெற்ற அன்பிற்பிரியாள் கோயிலில் திருப்பணிகள் செய்து புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கணபதி யாகத்துடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடா்ந்து பவானி ஆற்றில் இருந்து தீா்த்தக் குடம் எடுத்து வந்து யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. நான்கு கால பூஜைக்கு பின் சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்களுடன் யாக சாலையிலிருந்து பூஜிக்கப்பட்ட புன்னிய தீா்த்தக் குடங்கள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயில் விமான கலசம், வாணியா் பிள்ளையாா் மற்றும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித தீா்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் புனித தீா்த்தம் தெளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து அன்பிற்பிரியாள் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை வட்டார வாணியா் செட்டியாா் சங்கத்தினா் செய்திருந்தனா்.