ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிஸா பெண் கைது

Wait 5 sec.

திருப்பூரில் ரயிலில் 3 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். திருப்பூா் பகுதியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, திருப்பூா் வடக்கு போலீஸாா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ரயிலில் இருந்து இறங்கி சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பயணிகள் சிலரை போலீஸாா் சோதனை செய்தனா். இதில், ஒடிஸாவைச் சோ்ந்த ஜீலா குமாா்(46) என்ற பெண்ணிடம் விசாரணை நடத்தி அவரது உடைமைகளைச் சோதனையிட்டனா். அப்போது அவா் 3 கிலோ கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.