பிக் பாஸ் 10: வெளியேறிய முத்தழகிக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு!

Wait 5 sec.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட முத்தழகிக்கு தனது சொந்த ஊரான மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் சேர்ந்து பட்டாசு வெடித்து, நடனமாடி உற்சாகமாக முத்தழகியை வரவேற்றனர். பிக் பாஸ் வீட்டில் அவரின் விளையாட்டைப் பாராட்டும் விதமாக கேக் வெட்டி உறவினர்கள் கொண்டாடினர். இது தொடர்பான விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் முத்தழகி பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் முத்தழகிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும்போது, ஒரு நடிகையாக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், உங்கள் படத்தின் புரமோஷனுக்காக மீண்டும் உங்களை சந்திக்க வேண்டும் எனக் கூறி ஹீரோயின் எனக் குறிப்பிட்டு பிக் பாஸ் வாழ்த்தி அனுப்பியிருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது முத்தழகி நடித்திருந்த டோரதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் அவரின் பாத்திரம் சிறிது நேரமே வந்திருந்தாலும், பலரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு அவருக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.டிடிஎஃப் வாசனை ரெட் கார்டு வாங்க வைக்க வேண்டும்! முகேஷிடம் ஜேசன் கூறிய ரகசியம்!Bigg Boss 10: Enthusiastic welcome in Madurai for the evicted contestant, Muthazhagi