அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதைப் பெற்றிருப்பது பெரும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் சாதனைப் புரிந்தவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் குடியரசுத் தலைவரால் தாதா சாகேப் பால்கே எனும் உயரிய விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது. வாழ்நாள் சாதனையாளருக்கான இந்த விருதை நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால் உள்ளிட்ட பலரும் பெற்றுள்ளனர். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் எனும் பெயரில் இந்திய மற்றும் சர்வதேச கலைஞர்களுக்கு விருது அறிவித்துள்ளது. இதில், பிரபல அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்-க்கு சிறந்த சர்வதேச கலைஞர் எனும் விருது அந்தத் தனியார் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க பாடகிக்கு இந்திய அரசின் உயரிய விருது வழங்கப்படுவதாகக் கூறி இணையத்தில் வெளியான பதிவுகள் பெரும் அதிர்வுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. முன்னதாக, தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழாவின் நிறுவனத் தலைவரான மும்பையைச் சேர்ந்த அனில் மிஷ்ரா மற்றும் அவரது மகன் மீது கடந்த 2025 ஆம் ஆண்டு பணமோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா! சிறந்த திரைப்படம், நடிகர்கள் அறிவிப்புThe fact that pop singer Taylor Swift has received the Dadasaheb Phalke International Film Festival Award has caused a great deal of confusion.