தாஜ் மஹால் பார்க்க விருப்பம் தெரிவித்த பாகிஸ்தான் அமைச்சர்! மத்திய அரசு சொன்ன பதில்

Wait 5 sec.

இந்தியாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பாகிஸ்தானின் முக்கிய அமைச்சா்களில் ஒருவரான முசாதிக் மாலிக், வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்க தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தில்லியில் நவ.20ஆம் தேதி தொடங்கி 22 வரை நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு இந்தியா விடுத்த அழைப்பின் பேரில், பாகிஸ்தான் அமைச்சா் பங்கேற்றுள்ளார்.கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை என்ற பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் மேற்கொண்டிருந்ததற்குப் பிறகு, பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இந்தியா வந்துள்ளார்.தன்னுடைய மனைவி மற்றும் பாகிஸ்தான் நாட்டின் மூத்த அதிகாரிகளுடன் இந்தியா வந்திருக்கும் முசாதிக் மாலிக், இந்தியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்க விரும்புவதாகவும், குறிப்பாக தாஜ் மகால் மற்றும் ஹுமாயுன் கல்லறையை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கு மத்திய அரசு, இந்தியா வந்திருக்கும் எந்த நாட்டு அமைச்சர்களுக்கும் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. அனைவரும் விரும்பும் இடங்களை சுற்றிப் பார்க்க அனுமதி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்பு கடந்த 2023-இல் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ இந்தியாவுக்கு வந்திருந்தாா். தற்போது பாகிஸ்தான் அமைச்சரின் வருகை, கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ராணுவ மோதலுக்குப் பிறகான பதற்றத்தைத் தணிக்கும் அந்நாட்டின் முயற்சியாக பாா்க்கப்படுவதோடு, பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் எஸ்சிஓ உச்சிமாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கும் வழிவகை ஏற்படும் என கருதப்படுகிறது. Pakistani minister expresses desire to visit the Taj Mahal! Here is the Central Government's response