இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி மெல்பர்னில் தொடங்கியது. இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் இளம் வீரர்களுடன் ஆஸி. அணி களமிறங்குகிறது. சாம் ஹார்பர் மற்றும் லாச்சி ஷா அறிமுகமாகிறார்கள்.ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன. இங்கிலாந்து அணி: பிலிப் சால்ட், அனியூரின் டொனால்ட், ஹாரி புரூக் (கேப்டன்), ஜோர்டன் காக்ஸ் (விக்கெட் கீப்பர்), டாம் பான்டன், வில் ஜாக்ஸ், சாம் கரண், ஜேமி ஓவர்டன், லியாம் டாசன், ஆதில் ரஷித், ஹென்றி குரோகோம்ப்.ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ்(கேப்டன்), ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், சாம் ஹார்ப்பர் (கீப்பர்), நிகில் சௌத்ரி, டிம் டேவிட், லாக்லான் ஷா, ஜாக் எட்வர்ட்ஸ், ஜோயல் டேவிஸ், பென் துவார்ஷுயஸ் , ஆடம் ஜாம்பா, ரைலி மெரிடித்.இந்தப் போட்டியை இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ஃபேன்கோட் (fancode ) செயலியில் நேரலையில் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Sam Harper and Lachy Shaw make it two debutants for Australia in the first T20I game of the #AUSvENG series MORE: https://t.co/FHiAzsYj3U pic.twitter.com/iZCBoqhevf— cricket.com.au (@cricketcomau) November 21, 2026Ready to take on Australia pic.twitter.com/Xd1WkBOYm4— England Cricket (@englandcricket) November 21, 20262018 சர்ச்சை: வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து வார்னர், கவாஜா தற்காலிக நீக்கம்!First T20 against England: Australia’s bowling attack to feature young players!