நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஓ.ம் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் முந்தைய படங்களான இட்லி கடை, கர வசூலினை முந்தியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நேற்று (நவ.20) உலகம் முழுவதும் வெளியான ஓ.ம் படத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. இருப்பினும் முதல் நாளில் இந்திய அளவில் ரூ.20.55 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக அளவில் முதல் நாளில் இந்தப் படம் ரூ.31.55 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முந்தைய தனுஷ் படங்களான இட்லி கடை ரூ.10. 50 கோடியும் கர திரைப்படம் ரூ.5. 75 கோடியும் வசூலித்துள்ளன.இட்லி கடை படத்தை விடவும் 69 சதவிகிதம் அதிகமாகவும் கட படத்தை விடவும் 3 மடங்கு வசூலித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்தியா முழுவதும் 45.6 சதவிகிதம் பார்வையாளர்கள் படத்தைப் பார்வையிட்டுள்ளார்கள். தெலுங்கில் ரூ.4 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் தனுஷ் படங்களியேலே அதிகம் வசூலித்த படமாக ஓ.ம் மாறியுள்ளது. ஹிந்தியில் ரூ.35 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. #OM releases today I surrender the film O.M Operation Mole to the audience with immense gratitude, faith and enthusiasm! அண்ணாமலையாருக்கு அரோகரா#AnnamalaiyarukkuArogara #SwamiyeSaranamAyyappaa pic.twitter.com/tQGTAp5MzU— Rajkumar Periasamy (@Rajkumar_KP) November 20, 2026மிகப்பெரிய வெற்றி... ஏஒடி படத்தைப் பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி! O.M: Operation Mole day 1 box office: Dhanush has bigger opening than Kara, Idli Kadai