திமுக முன்னாள் பத்திரப்பதிவு அமைச்சர் மூர்த்தி வீட்டில் சோதனையை தொடர்ந்து அவரது உறவினர்கள் வீடுகளிலும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சோதனை நடத்தினர். முன்னாள் பத்திர பதிவு அமைச்சர் மூர்த்தியின் உறவினரான பாலமேடு பகுதியில் தன்ராஜ், அலங்காநல்லூர் பகுதியில் பொன்ராம், பூவந்தி பகுதியில் உள்ள ராஜாமணி ஆகியோரது வீடுகளிலும் மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் பி. மூர்த்தி.இவர் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் உள்ள செம்மண், கல் குவாரிகளில் விதிகளை மீறி செம்மண், கற்களை வெட்டி எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில், பி. மூர்த்தி மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த நிலையில், குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மதுரை பி. மூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல் குவாரி டெண்டர் குறித்த முக்கிய ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னாள் அமைச்சரின் வீட்டின் முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.காவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்