நடிகை பிரியங்கா மோகன் பிறந்த நாளில் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. முதல்முறையாக பிரியங்கா மோகன் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கர்நாடகத்தைச் சேர்ந்த பிரியங்கா மோகன் 2019ல் தெலுங்கில் நானியுடன் கேங் லீடர் படத்தில் தென்னிந்திய அளவில் புகழ்ப்பெற்றார். தமிழில் டாக்டர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களியும் ஈர்த்தார். தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஐந்து படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகனின் ஒரு படம்தான் ’ஏஜிஎஸ்29’. இந்தப் படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் நாசர், ராஜீவ் மேனன், ரமேஷ் திலக் நடிக்கிறார்கள். கேஜிஎஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். திகில் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் பிரியங்கா மோகன் கண்கள் வித்தியாசமாக இருக்கிறது. இது என்ன மாதிரியான படம் என ரசிகர்களிடம் ஆவலை தூண்டியிருக்கிறது. திகில் படமா அல்லது அறிவியல் புனைவு என்றா ரசிகர்கள் கமெண்டுகளில் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் படக்குழு வெளியிட்ட பதிவில் பிரெய்லியில் எழுதப்பட்டுள்ளதால், அந்த கதாபாத்திரத்தில் அவருக்குக் கண்பார்வை குறைபாடு ஏதும் இருக்குமா என்ற யூகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.⠠⠓⠁⠏⠏⠽ ⠠⠃⠊⠗⠞⠓⠙⠁⠽ ⠠⠏⠗⠊⠽⠁⠝⠅⠁ ⠠⠍⠕⠓⠁⠝Team #AGS29 wishes @priyankaamohan a very Happy Birthday ❤️Written & Directed by @anandanmsoffcl A @RaviBasrur Musical#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @archanakalpathi @aishkalpathi… pic.twitter.com/mamKHt4Lio— AGS Entertainment (@Ags_production) November 20, 2026தந்தையுடன் மகன்... வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த புகைப்படம்!A unique character... New film poster unveiled on Priyanka Mohan's birthday!