கணவரின் தோழியைக் கொல்ல ரூ.13 லட்சம் கூலி! துப்புத் துலக்க உதவிய 300 சிசிடிவிகள், ஜிபிஎஸ் டிராக்கிங்!

Wait 5 sec.

மகாராஷ்டிர மாநிலத்தில் 23 வயது ஏர்லைன் பெண் ஊழியர், கொண்டியோ மாவட்ட வனப்பகுதியில் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நீண்ட கால நண்பரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கணவருக்கும், தோழிக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கூலிப்படையை வைத்து, அப்பெண்ணைக் கொன்றிருக்கிறார் மனைவி. கூலிப்படைக்கு கொலை செய்ய ரூ.13 லட்சத்தை வழங்கியிருக்கிறார்.கொலை செய்யப்பட்டவர் வர்ஷா தாகூர் என்பதும், புனே விமான நிலையத்தில் வேலை பார்ப்பவர் என்பதும் தெரிய வந்துளள்து. தீபாவளியைக் கொண்டாட இரண்டரை வயது மகளுடன் மத்தியப் பிரதேசம் சென்றிருந்த போது, நீண்ட கால நண்பர் நிதேஷை (42) சந்திக்க திட்டமிட்டுள்ளார்.வனப்பகுதிக்கு அருகே அவர்கள் சந்தித்தபோது, மூகமூடி அணிந்து வந்த மூன்று பேர் அப்பெண்ணைக் குத்திக் கொலை செய்திருக்கிறார்கள் சம்பவத்தை நிதேஷ் மட்டுமே பார்த்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர், நிதேஷ் மனைவி மோனாவை (41) கைது செய்தார்கள். கூலிப் படை வைத்து வர்ஷாவைக் கொன்றதும், கணவருடன் நெருங்கிப் பழகியதால் இந்த கொலையை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.குற்றவாளிகள், மோனா பெயரில் பதிவு செய்யப்பட்ட காரில்தான் நிதேஷை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அந்த வாகனத்தின் லைவ் ஜிபிஎஸ் டிரேக் செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் டத்திய விசாரணையில்தான் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே சுமார் 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், பல்வேறு நபர்களின் தொலைபேசி அழைப்புகளை கண்டறிந்தும் மிகவும் சிக்கலான இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். Rs. 13 lakh contract to kill husband’s female friend! 300 CCTV cameras and GPS tracking helped crack the case!