தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா: இளையராஜா, கமல்ஹாசன், சாண்டி மாஸ்டருக்கு விருதுகள் அறிவிப்பு

Wait 5 sec.

தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா 2026-ன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயக்குநராக துரந்தர் படத்துக்காக ஆதித்யா தார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இவருக்கு சிறந்த தயாரிப்பாளருக்கான விருது துரந்தர் படத்துக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இதே படத்துக்காக சிறந்த தயாரிப்பாளர்களாக லோகேஷ் தார், ஜோதி தேஷ்பாண்டே ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சிறந்த ஒளிப்பதிவாளராக காந்தாரா படத்துக்காக அரவிந்த் எஸ். காஷ்யப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த நடன இயக்குநராக கூலி படத்தின் மோனிகா பாடலுக்காக சாண்டி மாஸ்டர் அறிவிக்கப்பட்டுள்ளார்.சிறந்த திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பிரிவில் ஹக் படத்துக்காக ரேஷு நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த துணை நடிகராக சாவா படத்துக்காக வினீத் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்காக (வில்லன்) துரந்தர் படத்தின் அக்‌ஷய் கன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த நகைச்சுவை பாத்திரத்தின் பிரிவில் ஹௌஸ்ஃபுல் 5 படத்தின் ரிதேஷ் தேஷ்முக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த நகைச்சுவையாளராக சமய் ரெய்னா (ஸ்டாண்ட்-அப்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த பாடலாசிரியர் பிரிவில் சயாராவுக்காக இர்ஷாத் கமில் அறிவிக்கப்பட்டுள்ளார்.சிறந்த கலைஞர் பிரிவில் கரண் ஆஜிலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த பாடலுக்கான பிரிவில் சயாரா திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் துரந்தர் படத்துக்காக சஷ்வத் சச்தேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சிறந்த பின்னணி பாடகராக சயாரா படத்துக்காக ஃபஹீம் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இசைத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக இளையராஜாவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.திரைத் துறையில் சிறந்த பங்களிப்புக்காக கமல்ஹாசனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Dadasaheb Phalke International Film Festival Awards 2026