கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவையைத் தடை விதிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு ஆளும் காங்கிரஸ் அரசு, 2024-ல் தடை விதித்தது. இச்சேவைக்கான கொள்கை விதிகள் வெளியிடப்படும் வரை சேவை நிறுத்தப்பட வேண்டும் என மாநில உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பைக் டாக்ஸி நலச் சங்கத்தினர் மேல்முறையீடு செய்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.இந்த நிலையில், பைக் டாக்ஸிக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, என். கோட்டீஸ்வர் சிங் அமர்வு, பைக் டாக்ஸி சேவைக்குத் தடை விதிப்பதைவிட அதற்கான உரிய விதிமுறைகளை வகுப்பதே சிறந்தது. மலிவான கட்டணம் என்பதால், லட்சக்கணக்கான மக்கள் பைக் டாக்ஸியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சேவைக்கு மத்திய அரசும் தடை கூறாத நிலையில், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, பைக் டாக்ஸிக்கு தடைகோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா! சிறந்த திரைப்படம், நடிகர்கள் அறிவிப்புSupreme Court dismisses Karnataka appeal against bike-taxis