தொடை எலும்பு முறிவு உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அபாய கட்டத்தில் இருக்கும் ஏழு வார குட்டி யானை ஒன்று, சிறப்பு சிகிச்சைக்காக அசாமிலிருந்து குஜராத்தின் ஜாம்நகர் அருகே வந்தாரா சிறப்பு முகாமுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.வனவிலங்கு பராமரிப்பு மையமான வந்தாராவின் நிறுவனர் ஆனந்த் அம்பானி என்பதும், வன விலங்குகளை இதுபோல வான் வழியாக இடமாற்றும் நடவடிக்கை, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் இது மூன்றாவது நிகழ்வு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ராஜா என்று அழைக்கப்படும் குட்டி யானை அசாமில் பிறந்துள்ளது. சில நாள்களிலேயே அதன் வலது பின்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. எனினும் அதன் உடல்நிலை மோசமடைந்து வந்ததால், சிறப்பு சிகிச்சை தேவைப்படும் சூழல் ஏற்பட்டதால், வந்தாராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.Watch: Seven-week-old elephant calf Raja being airlifted from Assam to Vantara in Jamnagar, for life-saving specialised treatment after suffering a fractured thigh bone.With road travel of over 2,500 km ruled out due to his fragile condition, the airlift offers the young calf a crucial chance at recovery.— DeshGujarat (@DeshGujarat) November 20, 2026 அசாமின் குவகாத்தியிலிருந்து ஜாம்நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு சுமார் நான்கு மணிநேரம் ஆகும். ஆனால், சாலை வழியாகக் கொண்டு செல்வதென்றால் 2,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்றும், ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் குட்டி யானைக்கு மேலும அபாயத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த முன்னெடுப்பு நடந்து வருகிறது.ராஜா என்னும் இந்த குட்டி யானையின் தாய்க்கும் மிகவும் வயது குறைவு என்பதால், இந்த ராஜா பிறந்தபோது அச்சத்தில், தாய் எட்டி உதைத்து, குட்டியானை கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குட்டி யானையால் எழுந்து நிற்க முடியாமல் போனதால், தாய்ப்பாலும் கிடைக்காமல் உடல் நலிவடைந்தது.குட்டி யானையைப் பராமரிப்பவர்கள் உதவி கோரியதைத் தொடர்ந்து, அது பிறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அக்டோபர் 8 அன்று 'வந்தாரா' அமைப்பின் விரைவு மீட்புக் குழு ராஜாவுக்கு சிகிச்சையைத் தொடங்கினர்.தற்போது வந்தாரா அமைப்புக்கே அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவிருக்கிறது.