அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஐஷோஸ்பீட் எனப்படும் டேரன் வாட்கின்ஸ் ஜூனியர் ஜிடிஏ 6 விளையாட்டை 52 மணி நேரத்தில் நேரலையில் விளையாடி நிறைவு செய்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 21 வயதாகும் இவர் தனது குறும்புத்தனமான சேட்டைகளால் சமூக வலைதளத்தில் பிரலமானவர். ஸ்பீட் என செல்லமாக அழைக்கப்படுகிறார். ரொனால்டோ ரசிகரான இவர் தடகளத்திலும் ஆர்வம் உடையவர். யூடியூபில் நேரலை விடியோக்களை பதிவிட்டு உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்துள்ளார்.90ஸ் கிட்ஸ்களுக்கான மிகப்பெரிய விளையாட்டாக ஜிடிஏ 4 (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 4) இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜிடிஏ 6 எடிஷன் வெளியாகியுள்ளது. இந்த விளையாடினை இரவு முழுவதும் தூங்காமல் 52 மணி நேரம் 30 நிமிஷங்களில் முடித்து பலரையும் மிரள வைத்துள்ளார். இதற்கான நேரலை விடியோக்கள் யூடியூப்பில் வைரலாகி வருகின்றன. வெளியான இரண்டே நாள்களில் ஸ்பீட் இதனை முழுவதுமாக விளையாடி அசத்தியுள்ளார். முதல் 40 மணி நேரத்தில் 80 சதவிகித விளையாட்டினை முடித்தார். இடையில் தூக்கம் வந்தும் அதனைத் தவிர்த்து, முழுவதுமாக முடிக்கும் வரை ஓயமாட்டேன் என நேரலையில் கூறியுள்ளார். முழுவதுமாக முடித்ததும் கத்தி கூச்சலிடாமல் நாயகன் நாயகி இறந்ததால் ஸ்பீட் கண்ணீர் விட்டு அழுதார். இது ஸ்பாயிலாராக இருந்தாலும் பலரும் ஸ்பீட்டுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். எப்படி இவ்வளவு வேகத்தில் இதனை முடித்தார் என்று பலரும் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.செனா நாடுகளில் ஆதிக்கம்... முதல் இந்தியராக கே.எல். ராகுல் வரலாற்றுச் சாதனை! YouTuber IShowSpeed completed the game GTA 6 in a live stream lasting 52 hours!