ஆர்எஸ்எஸ், பாஜகவினரிடையே அச்சம், கோபம் மற்றும் வெறுப்பு ஆகியவை ஒரு வலையைப் பின்னியுள்ளதாகவும் அவர்களை அதிலிருந்து விடுவிப்பதே ஒரு இந்துவாக தனது கடமை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் தந்தையின் மடியில் அமர்ந்து தனது தாய் உணவருந்துவது குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். அவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவபெருமானின் மடியில் பார்வதி தாயார் அமர்ந்திருக்கும் கற்சிற்பப் புகைப்படத்தைப் பகிர்ந்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:''அச்சம், கோபம் மற்றும் வெறுப்பு ஆகியவை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் இதயங்களில் ஒரு வலையைப் பின்னியுள்ளன; இது அவர்கள் அன்பை உணர்வதையும் வெளிப்படுத்துவதையும் தடுக்கிறது.ஒரு உண்மையான இந்துவாக, அவர்களை இந்த வலையிலிருந்து விடுவிப்பது எனது கடமை. இதன் மூலம் அவர்களும் தங்கள் வாழ்வில் அன்பு மற்றும் ஒன்றிணைந்த உணர்வின் பிரமிக்கத்தக்க அழகையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கத் தொடங்க முடியும்.சத்யம் சிவம் சுந்தரம்'' எனப் பதிவிட்டுள்ளார். Fear, anger and hatred have woven a web in the hearts of BJP and RSS supporters that stops them from experiencing and expressing love.As a true Hindu, it is my duty to free them from this web, so that they too can start to experience the breathtaking beauty and joy of love and… pic.twitter.com/U5LDJ6MZ4z— Rahul Gandhi (@RahulGandhi) November 17, 2026This is my duty as a Hindu! What does Rahul Gandhi say?இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! நினைவுகளைப் பகிர்ந்த சோனியா!