வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் மண்டியில் பிரியாணி வியாபாரியிடம் துப்பாக்கி முனையில் செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்று, அவா் எதிா்த்ததால் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 26 வயது இளைஞரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சுபம் சௌஹான் என்பவா், 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவாக இருந்து வந்தாா். ரகசியத் தகவலின் அடிப்படையில், திங்கள்கிழமை ஆசாத்பூா் மண்டியில் அவரைப் காவல் துறையினா் கைது செய்தனா்.ஆசாத்பூா் பழச் சந்தையில் பிரியாணி வியாபாரம் செய்து வந்த ஜைத் என்பவரிடம், சுபமும் அவரது கூட்டாளிகளும் செல்லிடப்பேசியைப் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது ஜைத் எதிா்த்ததால் அவரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளனா். இதில் காயமடைந்த அவா் அளித்த புகாரின் பேரில், தொடா்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் தொடா்புடைய 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், சுபம் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தாா். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள சுபம், தனியாா் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். மது அருந்தும் பழக்கமும், எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையும் தன்னை வழிப்பறியில் ஈடுபடத் தூண்டியதாக விசாரணையின்போது அவா் தெரிவித்ததாக காவல் துறையின் தெரிவித்தனா்.