திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி: உடந்தையாக இருந்த பெண் கைது

Wait 5 sec.

ஆவடி: ஆவடியில் பெண்ணை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி ரூ.22 லட்சம் மோசடி செய்த நபருக்கு, உடந்தையாக இருந்த பெண்ணை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி கெளரிப்பேட்டை பழைய கள்ளுக்கடை தெருவைச் சேர்ந்த மாலதிசாகு (51). இவர், சாதி டாட் காம் என்ற திருமண இணையத்தளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்திருந்ததார். அதன் மூலம் வெளிநாட்டு கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி வாட்சாப் வழியாக அபிஷேக் என்பவர் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் லண்டனில் வசித்து வரும் பெரிய தொழிலதிபர் என்றும், தனது மனைவி தன்னைப் பிரிந்து சென்றுவிட்டதாகவும், தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அபிஷேக், மாலதிசாகுவை 2-ஆவது திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.இதனை நம்பிய மாலதிசாகுவிடம், அவரைச் சந்திப்பதற்காக தங்கம், வைரம் மற்றும் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருள்களுடன் இந்தியா வந்ததாக அபிஷேக் தெரிவித்துள்ளார். மேலும், தில்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது, சுங்கத்துறை அதிகாரிகள் என்னை கைது செய்துவிட்டதாகவும், என்னை விடுவிக்க அதிகாரிகள் பணம் கேட்பதாகவும் கூறி நாடகமாடியுள்ளார். இதனை நம்பிய மாலதிசாகு, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.22 லட்சம் பணத்தை அபிஷேக் கூறிய வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். இதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்த மாலதி சாகு ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் ஆணையர் த.செந்தில்குமார் உத்தரவின் பேரில் இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். அதில், மாலதிசாகு அனுப்பிய பணத்தில் ரூ.16 லட்சத்தை 5 வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அந்த வங்கிக் கணக்குகளின் உரிமையாளர்களில் ஒருவரான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா (30) என்பதும், இவர் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 26 இணையவழி மோசடி வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் ஆஷாவை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.Woman swindled of Rs 22 lakh under the pretext of marriage; female accomplice arrestedஅனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ. 75,000 வரையில் பயிா்க்கடன் தள்ளுபடி