யாருடைய அரியணையும் வேண்டாம்... லிடியன் பதிவு!

Wait 5 sec.

இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் அரசன் திரைப்படத்திலிருந்து விலகினார் என்றும் அவருக்குப் பதிலாக லிடியன் நாதஸ்வரம் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இயக்குநர் வெற்றி மாறனுக்கும் அனிருத்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே இதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம் இன்ஸ்டாகிராமில் இயக்குநர் வெற்றி மாறனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ”நான் பிறருக்குச் சொந்தமான அரியணையைக் கேட்கவோ பகிரவோ நினைப்பதில்லை என்பதைப் பணிவுடனே சொல்கிறேன். அனிருத் அண்ணன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. எங்களின் திருக்குறள் பாடல் உருவாக்கத்தில் அவரின் பங்களிப்புக்கு மனமார்ந்த நன்றி. View this post on Instagram A post shared by Lydian Nadhaswaram (@lydiannadhaswaramofficial) தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைக்க ஆவலுடன் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் நேரம் அமைய வேண்டும் என நம்புகிறேன். அதற்காகக் காத்திருந்தததும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இயக்குநர் வெற்றி மாறன் சார் எங்கள் வீட்டிற்கு வந்து நல்ல செய்தியைச் சொன்னார். அவருக்கு என் இதயம் கனிந்த நன்றி” எனத் தெரிவித்துள்ளார். இதனால், அரசன் திரைப்படத்திற்கு லிடியன் நாதஸ்வரம் இசையமைக்க உள்ளது உறுதியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷுக்கு தங்க மோதிரத்தை கழற்றிக் கொடுத்த மிஷ்கின்! ஏன்?Music composer Lydian Nadhaswaram has released a post.