இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்குத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூசிலாந்து பின்னர் மெதுவாக நிலைத்து ஆடியது. 72 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த நிலையில் க்ளென் பிலிப்ஸ் களத்தில் இறங்கினார். ஹென்றி நிகோலஸ் - க்ளென் பிலிப்ஸ் கூட்டணி இந்தியாவின் பந்துவீச்சைத் தாங்கி ரன்களைக் குவிக்க ஆரம்பித்தது. தற்போது, நியூசிலாந்து அணி 80.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. ஹென்றி நிகோலஸ் 109* ரன்களுடனும் க்ளென் பிலிப்ஸ் 91* ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள். இந்தக் கூட்டணி 311 பந்துகளில் 170 ரன்கள் குவித்துள்ளது. ஹென்றி நிகோலஸ் தனது 12ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்துள்ளார். விக்கெட்டுகள் விழுந்த வந்த நிலையில் மறுபக்கம் பொறுப்புடன் விளையாடி வருகிறார்.இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அன்ஷுல் கம்போஜ், ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட் எடுத்தார்கள். சுழல் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சிந்தர், வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுக்காமல் பந்துவீசி வருகிறார்கள். Test century number 1️⃣2️⃣ for Henry Nicholls His fifth Test ton at the Cello Basin Reserve takes him level with Brendon McCullum for Test centuries for New Zealand. #NZvIND | = @PhotosportNZ pic.twitter.com/Ue8M8bzc6S— BLACKCAPS (@BLACKCAPS) November 19, 2026நான் நம்பியதைவிட பல மடங்கு சாதனைகளைப் படைத்தவர் தோனி! சச்சின் புகழாரம்!Bumrah shines: Henry Nicholls and Glenn Phillips pair up in defense!