திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!

Wait 5 sec.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகள் குறித்து வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகின்றன.நேற்று (நவ. 19) நடைபெற்ற இரண்டாம் நாள் விசாரணையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், ”திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபம் ஏற்றப்படும் தூண், தீபம் ஏற்றுவதற்கானதல்ல. அது ஒரு அளவீட்டுத் தூண்” என்று குறிப்பிட்டார்.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:“டிசம்பர் 2025-ல், அப்போதைய திமுக ஆட்சியில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள 'தீபத்தூண்' சமணத் துறவிகளால் விளக்கேற்றுவதற்காக நிறுவப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தெரிவித்தது. இது, அந்தத் தூண் ஒரு 'நில அளவைக் கல்' (survey stone) என்று முன்னதாக அரசு கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு முரணானதாகும்.நேற்று, தற்போதைய அரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் வாயிலாக, உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீபத்தூணை ஒரு 'நில அளவைக் கல்' என்று குறிப்பிட்டுள்ளது.ஒரே கட்டமைப்பைப் பொறுத்தவரை, ஒரு அரசு எவ்வாறு இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் முற்றிலும் முரண்பட்ட நிலைப்பாடுகளை தெரிவிக்க முடியும்?இது, தமிழக அரசுக்கு (அன்று திமுகவாக இருந்தாலும் சரி, இன்று தற்போதைய அரசாக இருந்தாலும் சரி) இந்த விவகாரம் குறித்த புரிதலில் உள்ள தீவிரமான குறைபாடு அல்லது ஒட்டுமொத்த விஷயத்தையும் வேண்டுமென்றே தவறாகப் புரிந்துகொண்டிருப்பதையே காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.Tirupparankundram issue! Why is there a contradiction in the Tamil Nadu government's stance? Annamalai questions!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மதுரை ஆட்சியர் தரப்பில் வாதம்