கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,200-க்கு மேற்பட்டோருக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 19) விசாரணைக்கு வரவுள்ளது.இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்* முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நீதிமன்ற காவல் நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 19) விசாரணைக்கு வரவுள்ளது.* சென்னையில் சட்டவிரோத ஹூக்கா சேவை வழங்கும் பப்-களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு* கோவை பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக சட்டப்பிரிவு இணைச் செயலர் பரந்தாமன் தொடர்ந்த வழக்கு* டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்து கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு* ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி வெங்கடாஜலபதி என்பவர் தொடர்ந்த வழக்கு* போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,200-க்கு மேற்பட்டோருக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்படவிருக்கிறது.Which cases are up for hearing at the Madras High Court today (Nov 19)?தமிழகத்தின் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 2.1% மட்டுமே அதிகரிப்பு