காவிரியில் போதுமான நீர் இருப்பு இருந்தால் தமிழகத்துக்கு வழங்கத் தயாராக இருப்பதாக, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். காவிரியில் இருந்து கர்நாடகம் தரவேண்டிய மீதமுள்ள நீரைத் திறந்து விட உத்தரவிடுமாறு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 20) தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.11 ஆயிரம் மில்லியன் கியூபிக் கனஅடி நீரைக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தமிழகத்துக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகத்திடம் போதுமான அளவுக்கு காவிரி நீர் இருந்தால், தமிழகத்துக்கு காவிரி நீரை விடுவிக்கத் தயாராக இருப்பதாகவும், தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, நீர் இருப்பு குறித்த கள நிலவரைத்தையே பிரதிபலிக்கிறது என்றும் முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். இதுபற்றி, அவர் கூறுகையில், “எங்களிடம் தண்ணீர் இருந்தால், நிச்சயமாக நாங்கள் தமிழ்நாட்டுக்குத் வழங்குவோம். எங்களிடம் குடிப்பதற்கே போதுமான அளவுக்குத் தண்ணீர் இல்லை. நம் மாநிலத்தை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு உண்டு. நீர் இருப்பு குறித்து நம் விவசாயிகளை நான் ஏற்கெனவே எச்சரித்துள்ளேன்.இன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதுதான் கள நிலவரம். தமிழ்நாட்டுக்கும் அது தெரியும். நமக்கும் தெரியும். அனைவருக்கும் எவ்வளவு தண்ணீர் இருப்பு உள்ளது என்பது தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.காவிரி விவகாரம்: தமிழக அரசின் 2 இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்Karnataka CM Shivakumar has stated that they are prepared to provide water to Tamil Nadu, provided there is sufficient water storage in the Cauvery.