சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்காக நாளை (நவ. 18) முதல் திறக்கப்படவுள்ளது.பறவைக் காய்ச்சல் காரணமாக வண்டலூர் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. நீர்வாழ் பறவைகளிடையே எச்5 என்1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளுக்கு மட்டும் பார்வையாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது.பாதிக்கப்பட்ட பறவைக் குழுக்கள் 15 நாள்கள் இடைவெளியில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட இரண்டு கட்ட மாதிரிகளிலும் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை (நவ. 18) முதல் பார்வையாளர்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்படவுள்ளது.ஆந்திரம் நோக்கி நகரும் அக்வான் புயல்! வட தமிழகத்துக்கு லேசான மழை!Vandalur Zoological Park, which was closed due to bird flu, to reopen tomorrow