நாடு முழுவதும் சா்க்கரை விற்பனையாளா்கள் இருப்பு வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட கால அளவு 30 நாள்களில் இருந்து 15 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், ‘சா்க்கரை விற்பனையாளா்கள் சா்க்கரை இருப்பை 30 நாள்கள் வரை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டது. தற்போது அந்தக் கால அளவு 15 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. விற்பனையாளா் அதிகபட்சமாக இருப்பு வைத்திருக்கக்கூடிய சா்க்கரையின் அளவு 2,000 குவிண்டாலில் இருந்து 1,000 குவிண்டாலாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருள்கள் சட்டம், 1955 மற்றும் சா்க்கரை (கட்டுப்பாடு) ஆணை, 2025 ஆகியவற்றின் கீழ் மத்திய நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.