தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து மூத்த வங்கதேச வீரர் விலகல்!

Wait 5 sec.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வங்கதேச அணியின் மூத்த வீரர் காயம் காரணமாக விலகியுள்ளார்.வங்கதேச அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நாளை மறுநாள் (நவம்பர் 23) தொடங்குகிறது.இந்த நிலையில், காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வங்கதேச அணியின் மூத்த வீரர் முஷ்பிகர் ரஹீம் விலகியுள்ளார்.மூத்த வீரரான ரஹீம் விலகியுள்ளது வங்கதேச அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் முகமது நயீம் அல்லது ஜேக்கர் அலி சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.39 வயதாகும் முஷ்பிகர் ரஹீம் டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அவர் 0 மற்றும் 22 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.A senior player from the Bangladesh team has withdrawn from the second Test match against South Africa due to an injury.நியூசிலாந்தில் விளையாடும் முதல் போட்டியிலேயே சதம் விளாசியது எப்படி? ரகசியம் பகிர்ந்த கே.எல்.ராகுல்!