ஐபிஎல் தொடரில் தோனியின் மறக்க முடியாத சாதனைகள்; 2008 முதல் இன்று வரை!

Wait 5 sec.

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகமானபோதிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த மகேந்திர சிங் தோனி அந்த அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த மகேந்திர சிங் தோனி, இன்று (நவம்பர் 17) ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தோனியின் பயணம் மற்றும் அவரது சாதனைகள் குறித்து பின்வருமாறு காணலாம்.கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனியை ஏலத்தில் எடுத்ததுடன் அவரை அணியின் கேப்டனாகவும் நியமித்தது. அதன் பின், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பயணம் செய்த அவர் சென்னையின் செல்லப் பிள்ளையாக மாறினார்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. சிஎஸ்கே கடந்த 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்று கொடுத்துள்ள கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்து கொள்கிறார் தோனி.ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமை தோனியையேச் சேரும். கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது.endrum thala #ForOurThala pic.twitter.com/VRmPKS2yEe— Chennai Super Kings (@ChennaiIPL) November 17, 202612 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 முறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று, மிகவும் வெற்றிகரமான அணி என்ற சாதனையை படைக்க தோனி காரணமாக அமைந்தார்.கடந்த 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்டபோது, தோனி ரைசிங் புணே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸைத் தவிர்த்து அவர் விளையாடிய அணி அது மட்டுமே. 2016 ஆம் ஆண்டு ரைசிங் புணே அணியின் கேப்டனாக செயல்பட்ட தோனி, 2017 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் தலைமையின் கீழ் ஒரு வீரராக விளையாடினார். அந்த சீசனில் புணே அணி இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது.கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தோனிக்கு மிகவும் சிறந்த சீசனாக அமைந்தது. பலரும் சென்னை சூப்பர் கிங்ஸை டாடீஸ் ஆர்மி எனக் கிண்டலடித்தபோது, அணிக்கு மூன்றாவது கோப்பையை வென்று கொடுத்தார் தோனி. அந்த சீசனில் 75.83 என்ற சராசரியுடன் தோனி 455 ரன்கள் குவித்தார்.ஐபிஎல் தொடரில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 84*. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் அவர் அதிக ரன்கள் எடுத்தார். அந்த சீசனில் அவரது சராசரி 83.20 ஆக இருந்தது. ஐபிஎல் தொடரில் 24 முறை அரைசதங்கள் விளாசியுள்ள தோனி, ஒரு முறை கூட சதம் விளாசியதில்லை.கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி தனது கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால், சிஎஸ்கே தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து மோசமான தொடக்கத்தைக் கொடுத்ததால், தொடரின் பாதியில் மீண்டும் தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டார்.கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையப் படைத்தார் எம்.எஸ்.தோனி.கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி, கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார்.கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் முழங்காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட காரணத்தால் தோனி பேட்டிங்கில் மட்டுமே ஈடுபட்டார். அந்தத் தொடரில் அவர் 73 பந்துகளில் 161 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.54 ஆக இருந்தது. அந்த சீசனில் அவர் ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்களைக் கடந்த வீரராக மாறினார்.கடந்த 2025 ஆம் ஆண்டு காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில், சிஎஸ்கேவின் கேப்டன் பொறுப்பை தோனி மீண்டும் ஏற்றார். ஆனால், அந்த சீசனில் சிஎஸ்கே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்தது.காயம் காரணமாக 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதுமாக தோனி விளையாடவில்லை. ஐபிஎல் தொடங்கியதிலிருந்து தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாமலிருந்தது இதுவே முதல் முறை. அந்த சீசனில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் அணி வீரர்களுடன் திடலில் வலம் வந்து ரசிகர்களை சந்தித்தார்.தோனி தனது ஐபிஎல் கிரிக்கெட் பயணத்தை 278 போட்டிகள், 5439 ரன்களுடன் நிறைவு செய்துள்ளார். அவரது சராசரி 38.30 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 137.45 ஆகவும் உள்ளது. அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் தோனி தன்வசம் வைத்துள்ளார்.அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் (ஐபிஎல் 2027) தோனி சென்னை சூப்பர் கிங்ஸின் ஆலோசகராக செயல்படவுள்ளார்.Regarding the records set by Mahendra Singh Dhoni in the IPL tournament since 2008...ஓய்வுபெற்றார் தோனி! சென்னை சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக நியமனம்!