வங்கக் கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் ஆந்திரத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆந்திரத்தின் நெல்லூர் - விசாகப்பட்டினம் இடையே நவ. 20 ஆம் தேதி கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்று இரவு தீவிர புயலாக மாறி நகரும் அக்வான் புயல், வரும் 19 ஆம் தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்து 20 ஆம் தேதி கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு மழை உண்டா?அக்வான் புயல் ஆந்திரக் கடலோரப் பகுதியில் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து செல்வதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பில்லை. வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் மட்டும் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.நவ. 18 ஆம் தேதி (நாளை) வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவ. 19, 20 தேதிகளில் லேசானது முதல் அதிதீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நவ. 21 ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நவ. 20 ஆம் தேதி ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழை பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் மீட்புப் படைகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார். அக்வான் புயலால் சென்னைக்கு பாதிப்பில்லை! மழை பெய்யுமா?Cyclone 'Akwan' moves towards Andhra Pradesh; light rain expected in Tamil Nadu