க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ. 17) உரையாற்றினார்.11 நாடுகள் அங்கம் வகிக்கும் 'ஆசியான்' கூட்டமைப்புக்கு இந்த ஆண்டு பிலிப்பின்ஸ் தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இதையொட்டி, பிலிப்பின்ஸின் தலைநகரான மணிலாவில் நடைபெறும் உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று பிலிப்பின்ஸ் சென்றார்.ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய ‘க்வாட்’ நாடுகளின் தலைவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீசி மற்றும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடினர்.அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பிலிப்பின்ஸ் தலைநகரான மணிலாவுக்கும் க்வாட் கூட்டமைப்புக்கும் இடையே நீண்டகால மற்றும் சிறப்பான பிணைப்பு உள்ளது.கடந்த 2007 ஆம் ஆண்டு நான்கு நாடுகளின் அதிகாரிகளும் முதன்முதலில் இங்குதான் சந்தித்தார்கள். அதன்பின்னர், 10 ஆண்டுகள் கழித்து 2017-ஆம் ஆண்டில் இதே நகரத்தில்தான் குவாட் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.2025 ஜனவரி முதல், தற்போது வரை க்வாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஐந்து முறை சந்தித்துள்ளனர். இது நமது அரசியல் நிலைப்பாட்டுக்கும், நமது கூட்டாண்மை மீதான அர்ப்பணிப்புக்கும் உதாரணமாக அமைகின்றது.இந்தியாவைப் பொறுத்தவரை, க்வாட் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டமைப்பு ஆகும். கடல்சார் பாதுகாப்பு முதல் விநியோகச் சங்கிலிகள் வரை, புதிய தொழில்நுட்பங்கள் முதல் பேரிடர் மீட்பு வரை, இந்தோ - பசிபிக் முழுவதும் க்வாட் நம்பகமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதே எங்களின் முயற்சியாக இருந்து வருகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.வாஷிங்டனில் கதிரியக்க வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈரான் திட்டம்! உளவுத்துறை எச்சரிக்கை!Prime Minister Narendra Modi addressed the leaders of the Quad grouping today (Nov. 17).