ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ரூ. 8,028 ஆக சரிவு!

Wait 5 sec.

புதுதில்லி: ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலையானது பேரல் ஒன்றுக்கு ரூ.51 குறைந்து ரூ.8,028 ஆக சரிந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் மாற்றமின்றி வர்த்தகமானது.மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், நவம்பர் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் விலையானது பேரலுக்கு ஒன்றுக்கு ரூ.51 சரிந்து ரூ.8,028 ஆக உள்ளது.டிசம்பர் மாத ஒப்பந்தத்தில் கமாடிட்டிஸ் சந்தையில் பேரல் ஒன்றுக்கு ரூ.54 குறைந்து ரூ. 7,955 ஆக உள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சமமாக இருந்தபோதிலும், உள்நாட்டு ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் விலையில் சரிவு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அதே வேளையில், சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்களை வர்த்தகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் தெரிவித்தனர்.உலகளாவிய சந்தையில், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் விலையானது முறையே பேரல் ஒன்றுக்கு $ 85.71 மற்றும் $ 92.41 என்ற அளவில் உள்ளது.Crude oil prices slipped by Rs 51 to Rs 8,028 per barrel in futures trade on Tuesday.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 43 காசுகள் உயர்ந்து ரூ. 93.51 ஆக நிறைவு!