வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவா? இவையும் காரணமாக இருக்கலாம்!

Wait 5 sec.

வீட்டில் தேவையே இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவுகள் இருந்து, நிம்மதியே இல்லாவிட்டால், வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை உள்ளிழுக்கும் சில பொருள்களும் காரணியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.பேசினாலே தகராறுதான், வாயை திறக்க முடியவில்லை, நிம்மதியே இல்லை என்று சொல்பவர்கள், ஒரு முறை, வீட்டின் வரவேற்பறையை சுற்றிப் பாருங்கள்.வரவேற்பறையில் வழக்கமாக குடும்ப புகைப்படங்கள், இயற்கைக் காட்சிகள், அழகிய புகைப்படங்கள் இடம்பெறலாம். அதைத் தவிர்த்து ஆக்ரோசமான அல்லது மனநிலையை கோபமாக மாற்றுவது போன்ற புகைப்படங்கள் இருந்தால் அதனை எடுத்துவிடவும்.வரவேற்பறைையில், உடைந்த சிலைகள், பொருள்கள், சிதிலமடைந்த படங்கள், தூக்கி எறிய வேண்டிய பொருள்கள் போன்றவற்றையும் தேவையில்லாத பொருள்களையும் வைத்திருக்கவே கூடாது.இவை எதிர்மறை ஆற்றலை இழுக்கும் சக்தி கொண்டிருப்பதால் தேவையில்லாத உடைந்த, சேதமடைந்த பொருள்களைத் தேவைப்படும் என்று வீட்டில் சேமித்து வைக்க வேண்டாம் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை வரவழைக்கும் இதுபோன்ற எதையும் குறிப்பாக வரவேற்பறையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கூர்மையான பொருள்கள், வாளுடன் இருக்கும் சிலைகள், ஆபத்தை ஏற்படுத்தும் பொருள்கள் போன்றவையும் வீட்டில் ஒரு அமைதியான சூழ்நிலையை குலைக்கும் என்பதால் வரவேற்பறையில் இருந்து அப்புறப்படுத்திவிடவும்.பழைய காகிதங்கள், குப்பைகள், காலியான தேநீர் கோப்பைகள், செயலிழந்த ரிமோட் கன்ட்ரோல்கள், ஒயர்கள், பிய்ந்து போன செருப்பு அல்லது குடை போன்றவற்றையும் வரவேற்பறையின் மூலையில் போட்டு வைக்க வேண்டாம்.இவற்றால்தான் வீடுகளில் சண்டை வருகிறதா? என்றால் நிச்சயம் இல்லை, இவை மனித மனநிலையை மாற்றுகின்றன. ஒரு அமைதியற்ற சூழலை, கோப உணர்ச்சியை தூண்டுகின்றன. இவையும் வீட்டில் அவ்வப்போது நேரிடும் சர்ச்சைகளுக்குக் காரணமாகலாம் என்பதால் வீட்டை முடிந்த அளவுக்கு சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முயலவும்.Is there constant fighting and bickering at home? These could be the reasons!