நடிகை சமந்தா ருத் பிரபு - இயக்குநர் ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நடிகை சமந்தா, கடந்த 2025 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமோருவை திருமணம் செய்துகொண்டார்.இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மா இண்டி பங்காரம் திரைப்படத்தின் விழாவில், தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை சமந்தா அறிவித்தார். தொடர்ந்து, தனது கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தார்.சமீபத்தில் பேபி மூன் எனப்படும் கர்பக் கால பயணத்துக்காக தனது கணவருடன் தாய்லாந்து சென்றிருந்த சமந்தா, புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.இந்த நிலையில், நேற்று (நவ. 19) தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாக புகைப்படத்தை பகிர்ந்து நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.அந்த பதிவில், தனது குழந்தைக்கு தேவ் நிடிமோரு என்று பெயர் சூட்டியிருப்பதாகவும், எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத மகிழ்ச்சியான தருணத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.நடிகை சமந்தாவின் பதிவைத் தொடர்ந்து, திரைப் பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். View this post on Instagram A baby boy for Samantha and Raj!மிகப்பெரிய வெற்றி... ஏஒடி படத்தைப் பாராட்டிய இயக்குநர் ராஜமௌலி!