உங்கள் பெயரில் பிஎஃப் கணக்கு இருக்கிறதா? இனி கொண்டாட்டம்தான் போங்க!

Wait 5 sec.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), வருங்கால வைப்பு நிதி (PF) தொகையைத் திரும்பப் பெறுவதற்கான விதிகளில் பல முக்கிய மாற்றங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறதுதற்போதைய நிலவரப்படி, பிஎஃப் கணக்கு இருக்கும் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள சேமிப்புத் தொகையில் 90 சதவீதம் வரை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள். முன்பு இது 75 சதவீதமாக இருந்தது. மேலும், பணியிலிருந்து விலகிய பிறகு, வருங்கால வைப்பு நிதியை முழுமையாகத் திரும்பப் பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை 12 மாதங்களிலிருந்து வெறும் இரண்டு மாதங்களாக வாரியம் குறைத்துள்ளது.முக்கிய மாற்றமாக, ஓய்வுபெறும் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்புத் தொகையை ஒரே நேரத்தில் முழுமையாகப் பெறுவதற்குப் பதிலாக, 'முறையான திரும்பப் பெறும் திட்டம்' மூலம் மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு தவணைகளாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவணையாக எடுக்கும்போது, வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை வட்டியை ஈட்டும் என்பதால் அதுவும் பயனாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதும், ஓய்வுபெறுபவர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிச் சேமிப்பிலிருந்து தொடர்ச்சியாக மாத வருவாய் ஈட்ட இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.வருங்கால வைப்பு நிதி (EPF) சேமிப்புக் கணக்கு இருக்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு, இந்த மாற்றங்கள், மிகுந்த பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Do you have a PF account in your name? Get ready to celebrate!