நவ. 24 முதல் 3 நாள்கள்! திருஒற்றியூர் ஆதிபுரீஸ்வரரின் நிஜரூப தரிசனம்!

Wait 5 sec.

சென்னை திருவொற்றியூரில் அருள்பாலித்து வரும் அருள்மிகு தியாகராஜசுவாமி கோயிலில் நிஜரூப தரிசனம் நவம்பர் 24-ஆம் தேதி முதல் ஆதிபுரீஸ்வரர் சுவாமியின் கவசம் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் 24-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியளவில் திறக்கப்பட்டு நவம்பர் 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு வரை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் நிஜரூப தரிசனத்தை பக்தர்கள் கண்டு மகிழும் வகையிலான வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஆதிபுரீஸ்வருக்கு மூன்று நாள்களும் தைல அபிஷேகம் நடத்தப்படும். நவ. 26-ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கவசம் மூடப்படும். இத்திருக்கோயிலில் புற்று வடிவ சுயம்பு லிங்கத் திருமேனியாக சிவபெருமான் அருள்பாலிப்பதால் நாள்தோறும் அபிஷேகம் நடத்தப்படுவதில்லை. புற்று வடிவிலான சுயம்பு லிங்கத் திருமேனியின் நிஜ ரூப தரிசனத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் விசேஷ பூஜையாகும்.அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் கைகூடும்! வார ராசி பலன்கள் (நவ. 20 - 26)