‘சட்டம்- ஒழுங்குக்கு சவக்குழி வெட்டும் வேலை பார்க்கும் தவெக’ - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

Wait 5 sec.

‘சட்டம்- ஒழுங்குக்கு சவக்குழி வெட்டும் வேலை பார்க்கும் தவெக அரசு’ என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே பட்டப்பகலில் இரட்டைக்கொலை நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பல்லாவரத்தில் ஆகாஷ் எனும் இளைஞர் நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கும் போலீஸ் டிஜ.பி-ஐ விட்டு புள்ளிவிவரங்களைச் சொல்ல வைத்து சமாளிக்கப் போகிறாரா முதல்வர்? ஆட்சிக்கு வந்த நாள் முதல் சட்டம் ஒழுங்கிற்கு சவக்குழி வெட்டும் வேலையை மட்டுமே இந்த சோப்ளாங்கி அரசு செய்து கொண்டிருக்கிறது. இனியாவது, பழிபோடும் Tactics-ஐயும், Reels Optics-ஐயும் விட்டு விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இந்த முதல்வர் முன் வர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்."The TVK government is digging a grave for law and order," condemned Udhayanidhi Stalin, the Leader of the Opposition in the Legislative Assembly.