ஹார்ட் பீட் நடிகை பாடினியின்புதிய திரைப்படம்!

Wait 5 sec.

ஹார்ட் பீட் நடிகை பாடினி குமார், ஜன்டா என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.சின்ன திரையில் ஒளிபரப்பான நாயகி, திருமணம் தொடர்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் பாடினி குமார். இதனைத் தொடர்ந்து, இவர் தமிழ் சினிமாவில் டேக் டைவெர்ஷன், சீசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.தொடர்ந்து, ஹார்ட் பீட் வெப் தொடரில் அனிதா பாத்திரத்தில் மருத்துவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்தத் தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.இதனைத் தொடர்ந்து, இவர் தூள்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஹார்ட்லி பேட்டரி ஆகிய தொடர்களிலும் நடித்திருந்தார். தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தில் தனது அழுத்தமான நடிப்பை வழங்கி, ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தார்.இந்த நிலையில், நடிகை பாடினி குமார் புதிய திரைப்படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். கொனிடேலா பவன் தேஜ் நாயகனாக நடிக்கிறார். ராஜசேகர் யாதவ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜன்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது.வசுந்தரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ராஜேஷ் குனிசெட்டி, வீரு யாதவ் ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். கிராமத்துப் பின்னணியில் காதல் மற்றும் அதிரடி கலந்து ஜன்டா படம் எடுக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், ஜன்டா திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இந்தப் படத்தின் பூஜையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.'Heart Beat' actress padine Kumar is starring in a new film titled 'Janta'.ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு நடிக்கும் புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படம்!