சென்னைக்கு நாளை விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை வாபஸ்!

Wait 5 sec.

சென்னைக்கு நவ. 18-ஆம் தேதி விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று, நவம்பர் 16 மாலை அக்வான் புயலாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நவ. 18, 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கையை தற்போது திரும்பப் பெற்றுள்ளது. நவம்பர் 18-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்பட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள்(நவம்பர் 19) சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. உயிருக்கு அச்சுறுத்தலால் இந்தியாவை விட்டு வெளியேறினேன்! லலித் மோடி விளக்கம்!