தங்கம் விலை மேலும் குறையுமா? 11 மாதங்களுக்குப் பின்... 1 லட்சத்துக்குக் கீழ்!

Wait 5 sec.

கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதிக்குப் பிறகு, அதாவது சுமார் 11 மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டில், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.அதிலும், தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக தங்கம் விலை குறைந்து வணிகமாகி வருகிறது. தங்கம் விலை கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஒரு சவரன் 99,520 ஆக இருந்தது. ஆனால், வரலாற்றில் இல்லாத அளவாக அதே ஜனவரி மாதம் 29ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,400 ஆக அதிகரித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தது. அப்போது ஒரு கிராம் தங்கம் ரூ.16,800. இந்த விலையுடன் இன்றைய விலையை ஒப்பிட்டால் ஒரு சவரனுக்கு ரூ.34,640 வித்தியாசம்.மீண்டும் 11 மாதங்களுக்குப் பிறகு, ஒரு லட்சத்துக்கும் கீழ் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கடைசியாக 2025ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி தங்கம் விலை ஒரு லட்சத்துக்கும் கீழ் இருந்தது. அதன்பிறகு ரூ.1.02 லட்சமாக அதிகரித்து தொடர்ந்து உச்சங்களைத் தொட்டது.சந்தை நிலவரங்கள், கச்சா எண்ணெய் விலை, முதலீட்டாளர்களின் தேவை, உலக நாடுகளில் பணவீக்கம் போன்றவை தங்கம் விலையில் எதிரொலிக்கின்றன.இதற்கு முன்பு, 2024ஆம் ஆண்டு ஒரு சவரன் தங்கம் ரூ.55 ஆயிரமாகவும், 2025ஆம் ஆண்டு ஒரு சவரன் ரூ.60 ஆயிரமாகவும் நீடித்து வந்த நிலை, 2026ஆம் ஆண்டு விலை நிலவரம் தலைகீழாக மாறியது. ஏழைகளின் எட்டாக்கனியாக இருந்த தங்கம் எட்டவே முடியாத கனியாக உருவெடுத்தது.தற்போதைய நிலவரம் என்ன?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ. 17) சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ. 99,760-க்கும் கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ. 12,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நவம்பர் 11ஆம் தேதி ஒரு சவரன் ரூ.1,04.120 ஆக இருந்த நிலையில், நவ. 12ஆம் தேதி ரூ.1,02,520 ஆகவும், அடுத்த நாள் நவ. 13ல் ரூ.1,01,560 ஆகக் குறைந்தது.தொடர்ச்சியாக சனிக்கிழமை (நவ.14) ரூ. 960 குறைந்து, ரூ.1,01,560-க்கும் விற்பனையாகியிருந்தது, திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 600 குறைந்து, ரூ. 1,00,320-க்கும் விற்பனையாகி வந்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக தங்கம் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. கடந்த 5 நாள்களில் சவரனுக்கு ரூ.4,360 குறைந்திருக்கிறது.2025 நவம்பர் - 2026 நவம்பர் ஒரு ஒப்பீடுகடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தங்கம் விலை அதிகரித்துதான் உள்ளது. அதாவது, கடந்த ஆண்டு இதே நாளில் விற்பனையான தங்கம் விலையை விட 8.05 சதவிகிதம் அதிகமான விலையில்தான் இப்போது விற்பனையாகி வருகிறது.நவம்பர் 17ஆம் தேதி 2025ஆம் ஆண்டு ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.11,540க்கும் விற்பனையாகி வந்தது. இன்று ஒரு சவரன் ரூ.99,760 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குறையுமா?தற்போதைய விலை கணிப்புகள் சொல்வது என்னவென்றால், தங்கம் விலை 4 - 5 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புள்ளதாகவே சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட தங்கம் விலை ஒரு சவரன் ரூ.80 ஆயிரம் வரை குறையலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், உறுதி செய்யப்படவில்லை.இதுவரை குறைந்ததே பெரிய விஷயம் என நினைத்து தங்கம் வாங்குவதும் நல்லதுதான், இல்லை மேலும் விலை குறைந்தால் வாங்கலாம் என்று தைரியமாக காத்திருப்பதும் அவரவர் விருப்பம்தான். இது முதலீட்டு ஆலோசனை எதுவும் இல்லை, விலை நிலவரங்கள் பற்றிய ஒரு அலசல் என்பது குறிப்பிடத்தக்கது. Will the price of gold fall further? For the first time in 11 months... it’s below 1 lakh!