அக்வான் புயலால் ஒடிசாவில் பெரிய பாதிப்பு இல்லை என்று மாநிலப் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார்.அக்வான் புயல், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைப் பகுதிகளில், கோபால்பூருக்கு அருகில் வெள்ளிக்கிழமை கரையைக் கடந்தது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 70-80 கி.மீ. ஆகவும், அவ்வப்போது 90 கி.மீ. வேகத்திலும் இருந்தது.புயல் கரையைக் கடக்கும் செயல்முறை காலை 8 மணியளவில் தொடங்கி, காலை 11.20 மணிக்கு நிறைவடைந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தாக்கத்தால் ஒடிசாவில் பலத்த மழை பெய்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பத்ராபூரில் அதிகபட்சமாக 209 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.அதே மாவட்டத்தில் உள்ள ஹிஞ்சிலியில் 207 மி.மீ., சிக்கிடியில் 199 மி.மீ., கோபால்பூரில் 190 மி.மீ. மற்றும் சத்ராபூரில் 139 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, அடுத்த ஆறு மணி நேரத்தில் 'காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும்', அதைத் தொடர்ந்து வரும் ஆறு மணி நேரத்தில் 'குறைந்த காற்றழுத்தப் பகுதியாகவும்' வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'அக்வான்' புயல் வெள்ளிக்கிழமை காலை கோபால்பூர் கடற்கரைக்கு அருகில் கரையைக் கடந்த நிலையில், ஒடிசாவில் பெரிய அளவிலான பாதிப்புகளோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று மாநிலப் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார். No major damage or loss of life has been reported in Odisha due to Cyclone Akvan, which made landfall near the Gopalpur coast on Friday morning, even as the state received heavy rainfall under the influence of the weather system, state Disaster Management Minister Suresh Pujari said.கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது அக்வான் புயல்!