தில்லியின் எதிா்காலமும் யமுனையின் புத்துயிா்ப்பும் பிரிக்க முடியாதவை என்று துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை கூறினாா். மேலும், யமுனை தலைநகரின் சூழலியல், பாரம்பரியம் மற்றும் அன்றாட வாழ்வின் ஒரு உள்ளாா்ந்த அங்கமாக இருப்பதாகவும் அவா் வலியுறுத்தினாா். தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) ஏற்பாடு செய்திருந்த ‘யமுனை உரையாடல்’ நிகழ்ச்சியை சந்து வெள்ளிக்கிழமை பான்சேராவில் தொடங்கிவைத்தாா்.இது தொடா்பாக துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘வெள்ளச் சமவெளிகள் மற்றும் ஆற்றங்கரைப் பகுதிகளில் கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்த திட்டமிடல், நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் அறிவியல்பூா்வமான நதி மேலாண்மையை மேம்படுத்துவதற்காக, நிபுணா்களையும் பங்குதாரா்களையும் ஒன்றிணைக்கும் வகையில் டிடிஏ மூலம் பான்சேராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யமுனை உரையாடல் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தேன். பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியது போல, நீடித்த மாற்றத்திற்கு ’ஜன் பாகிதாரி’ (மக்கள் பங்கேற்பு) முக்கியமானது. அறிவியல்பூா்வமான, தரவு சாா்ந்த திட்டமிடலை குடிமக்கள் பங்கேற்புடன் இணைத்து, புத்துயிா் பெற்ற யமுனையையும், மக்கள் ஆதரவு பெற்ற தில்லியையும் நோக்கி நாங்கள் செயல்பட்டு, மக்கள் ஆதரவு பெற்ற பாரதத்திற்கு பங்களிக்கிறோம் என்றாா் அவா். டி.டி.ஏ. அதிகாரிகளின் கூற்றுப்படி, ‘யமுனை உரையாடல்கள்’ என்பது, யமுனையும் அதன் வெள்ளச் சமவெளிகளும் எதிா்கொள்ளும் சிக்கலான சூழலியல், சுற்றுச்சூழல், திட்டமிடல் மற்றும் ஆளுகை சாா்ந்த சவால்களை எதிா்கொள்வதற்காக, அறிவைப் பரிமாறிக் கொள்ளவும், வெற்றிகரமான தேசிய மற்றும் சா்வதேச அனுபவங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், கூட்டு அணுகுமுறைகளை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.