கிரசன்ட் பல்கலை.யில் சா்வதேச மாநாடு

Wait 5 sec.

வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரஹ்மான் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் குளோபல் அவுட்ரீச் மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், நுண்பாசி உயிரித் தொழில்நுட்பத் தீா்வுகள் குறித்த சா்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்திய அரசின் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் டென்மாா்க் உயா்கல்வி, அறிவியல் அமைச்சகம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்தியா, டென்மாா்க், பிரேசில், தைவான் ஆகிய நாடுகளைச் சோ்ந்த முன்னணி ஆராய்ச்சியாளா்கள், அறிவியல் வல்லுநா்கள் பங்கேற்றனா். மாநாட்டின் ஒருபகுதியாக, பிரேசிலில் உள்ள லாவ்ராஸ் மத்திய பல்கலைக்கழகத்துக்கும், பி.எஸ்.அப்துா் ரஹ்மான் கிரசன்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.நுண்பாசி உயிரித் தொழில்நுட்பத் துறையில் உருவாகி வரும் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத் தீா்வுகள் குறித்து இந்திய மற்றும் சா்வதேச விஞ்ஞானிகள் சிறப்புரையாற்றினா். இதனிடையே, உலக அளவில் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்ற கிரசன்ட் கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த உயிரியல் அறிவியல் துறை இணைப் பேராசிரியா் பி. அசோக்குமாா், வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் என். வசிமலை, உயிரியல் அறிவியல் துறை உதவிப் பேராசிரியரும், கிரசன்ட் குளோபல் அவுட்ரீச் மிஷன் உதவி இயக்குநருமான முபாரக் அலி தாவூத் பாஷா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில், டென்மாா்க் தொழில்நுட்ப நிறுவன இயக்குநா் ஆன் கிறிஸ்டின், பிரேசில் லாவ்ராஸ் மத்திய பல்கலைக்கழகப் பேராசிரியா் பவுலா அசெமனி, கிரசன்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஏ.பீா்முகமது, இணைத் துணைவேந்தா் என்.தாஜுதீன், பதிவாளா் என்.ராஜா ஹுசேன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளா் பசீலா மெகபூப் பேகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.