அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு: முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து!

Wait 5 sec.

இசையமைப்பாளர் அனிருத் - காவியா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.இந்தியத் திரையுலகில் சமகாலத்தின் முக்கிய இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத் ரவிச்சந்தர். தமிழில் ‘3’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் விக்ரம், ஜெயிலர், ஜவான், லியோ, தேவரா போன்ற பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் செயல் இயக்குநரான காவியா மாறனுக்கும் சில நாள்களுக்கு முன் க்ரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நடிகர் ரஜினி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்பட மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து, இன்று சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் அனிருத் - காவியா மாறன் தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.இந்தத் வரவேற்பு நிகழ்வில் தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். முதல்வர் விஜய் நடித்த கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ மற்றும் ஜன நாயகன் போன்ற வெற்றிப் படங்களுக்கு அனிருத் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரள முதல்வர் சதீசன், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்கள்: முதல்வர் விஜய் வாழ்த்துAnirudh - Kaviya Maran wedding reception: Chief Minister Vijay offers his wishes in person!