அஸ்ஸாமில் வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவசாகர் மாவட்டத்தில் ஒருவர் பலியானார். இதையடுத்து இந்த ஆண்டின் வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. அஸ்ஸாமில் இடைவிடாத பலத்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஏழு மாவட்டங்களில் சுமார் 78,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், கோலாகாட் மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 31 நிவாரண முகாம்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் வீடுகளை இழந்த 5,000-க்கும் மேற்பட்டோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுதவிர 37 நிவாரண விநியோக மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மொத்தமாக 8,268.71 ஹெக்டேர் பயிர் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் 42,105 விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.The death toll in Assam's floods rose to 104 on Friday with one more fatality, while the number of people affected by the deluge also increased marginally to over 78,000, according to an official bulletin. நீலகிரி, தேனி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! நாளை?