ஷிப்ராக்கெட் ஐபிஓ: கடைசி நாளில் 99.38 மடங்கு கூடுதல் விண்ணப்பம்!

Wait 5 sec.

புதுதில்லி: மின்னணு வர்த்தக சேவை தளமான ஷிப்ராக்கெட் லிமிடெட், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிட்ட நிலையில், கடைசி நாளில் 99.38 மடங்கு அதிகப்படியான சந்தாவைப் பெற்று சாதனை படைத்தது.ரூ. 1,617.5 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ-வில் 9,44,36,030 பங்குகளுக்கு நிகராக 9,38,51,66,560 மூலம் விண்ணப்பங்கள் வாங்க முதலீட்டாளா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.நிறுவன முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விட 122.80 மடங்கு அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். அதே வேளையில், நிறுவனங்கள் சாராத முதலீட்டாளர்கள் பிரிவில் 88.99 மடங்கு விண்ணப்பங்களும், சில்லறை முதலீட்டாளர் பிரிவில் 46.42 மடங்கு விண்ணப்பங்களும் பெறப்பட்டது.ஐபிஓ-விற்கான பங்கு விலை வரம்பு, பங்கு ஒன்றுக்கு ரூ. 92 முதல் ரூ. 97 வரை நிர்ணயிக்கப்பட்டது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதியை, சந்தைப்படுத்தல் முயற்சிகளில் முதலீடு செய்யவும், தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், மற்ற நிறுவனங்களை கையகப்படுத்தல் மேற்கொள்ளவும், பொதுவான தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.ஷிப்ராக்கெட் பங்குகள் ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் அதிகாரபூா்வமாக பட்டியலிடப்பட உள்ளது.Shiprocket Ltd was subscribed 99.38 times on the last day of bidding.ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தத்தில் தங்கம் விலை சரிவு!